ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 11 am - Top 10 News

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்

Top 10 News @ 11 am
Top 10 News @ 11 am
author img

By

Published : Jun 8, 2021, 11:04 AM IST

1.தனியார் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள்: புதிய நெறிமுறைகள் உடன் தொடக்கம்!

மதுரையில் உள்ள தனியார் பள்ளிகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் மாணவ மாணவியருக்கான இணைய வழி வகுப்புகளை நேற்று(ஜுன் 7) முதல் தொடங்கின.

2.துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்ய கோரிக்கை!

சோழவந்தான் அருகே உள்ள துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3.தாலுகா மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்: மா.சுப்பிரமணியம்

தாலுகா மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

4.காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு - சென்னை பெருநகர காவல் ஆணையர்

காவல் துறையினரிடம் வாகன ஓட்டிகள் தகராறு செய்யும் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

5.'ஜெனோம் சீக்வென்ஸிங்' ஆய்வகம் தமிழ்நாட்டில் வேண்டும்: அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எம்.பி.

'ஜெனோம் சீக்வென்ஸிங்' செய்வதற்கான ஆய்வகத்தைத் தமிழ்நாட்டில் நிறுவிடவேண்டும் என ரவிக்குமார் எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

6.போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த பயணி கைது!

போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து சென்னை வந்த பயணியை சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் கைது செய்தனர்.

7.பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை: பழிக்குப் பழி?

கொலை வழக்கில் கைது செய்யப்ப்டடு ஜாமீனில் வெளி வந்த ரவுடியை, ஆறு பேர் கொண்ட கும்பல் கொடூரமான முறையில் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8.'இலவசம் ஆனா தனியார் கட்டணம் வசூலிக்கலாம்' - தடுப்பூசி குறித்து ராகுல் காந்தி கேள்வி

எல்லோருக்கும் இலவச தடுப்பூசி என்றால், ஏன் தனியார் மருத்துவமனைகள் மட்டும் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

9.மின்னல் தாக்குதல்: தொடர் உயிரிழப்புகளைச் சந்திக்கும் மேற்கு வங்கம்

மேற்குவங்க மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் முரிஷிதாபாத் மாவட்டத்தில் ஆறு பேர், ஜாங்கிபூர் பகுதியில் ஒருவர், பெர்ஹாம்பூரில் இரண்டு பேர் என மொத்தம் 9 பேர் நேற்று (ஜுன் 7) உயிரிழந்துள்ளனர்.

10.புல்வாமாவில் 5 கிலோ வெடிப்பொருள் மீட்பு

புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட மீது 5 கிலோ அளவிலான வெடிப்பொருள் கண்டறியப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.