தேர்தல் காரணமாக காவலர் உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு
காவலர்கள் சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளதால், காவலர் உடற்தகுதி தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அமெரிக்கர்கள் மியான்மர் செல்ல வேண்டாம்- வெள்ளை மாளிகை
அமெரிக்கர்கள் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் செல்ல வேண்டாம் என வெள்ளை மாளிகையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், “மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சி, வன்முறை-கலவரம், கோவிட் பரவல்” உள்ளிட்வை காரணங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.
8 மணி நேர விசாரணைக்கு பின்னர் நடிகர் அஜிஸ் கான் கைது
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் நடிகர் அஜிஸ் கானை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றியதாக புகார் உள்ளது.
அஸ்ஸாம் இரண்டாம் கட்டத் தேர்தல்: ஓர் பார்வை
அஸ்ஸாமில் நாளை (ஏப்ரல் 1) 39 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 37,34,537 ஆண் வாக்காளர்கள், 36,09,959 பெண் வாக்காளர்கள், 135 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 73,44,631 பேர் வாக்களிக்க உள்ளனர்.
அருப்புக்கோட்டையில் வாக்கு சேகரித்த விஜயகாந்த்
அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆர். ரமேஷை ஆதரித்து தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார்.
இது காசுக்கு மாரடிக்கும் கூட்டம் அல்ல, மக்களுக்காக உழைக்கும் கூட்டம்- விஜய பிரபாகரன்
கள்ளக்குறிச்சி: இது காசுக்கு மாரடிக்கும் கூட்டம் அல்ல, மக்களுக்காக உழைக்கும் கூட்டம் என தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
'அவர் ரவுடி துறை அமைச்சர்’: ராஜேந்திர பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின்
விருதுநகர்: ”ராஜேந்திர பாலாஜி என்ன துறை அமைச்சர் என்றால், ரவுடி துறை அமைச்சர் என்று தான் சொல்ல வேண்டும்; இவர் பபூன், பலுான் ரவுடி”என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆக்ராவில் கணவர் கண்முன்னே பெண் பாலியல் வன்புணர்வு!
கணவர் கண்முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது. இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தென் மாவட்ட ரயில்கள் தாமதம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
ரயில் இயக்கம் கணினிமயமாக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்பல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை சென்று வரும் ரயில்களின் இயக்கத்தில் நேற்று தாமதம் ஏற்பட்டதாக, தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் தெரிவித்துள்ளது.
’திமுக தலைமையிலான ஆட்சி இந்தியாவை காப்பாற்றும்’ - சீத்தாராம் யெச்சூரி
திண்டுக்கல்: பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. இந்தியாவைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.