ETV Bharat / state

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11am - taamilnadu latest news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம் இதோ...

top 10 news at 11 am
11 மணி செய்திச்சுருக்கம்,Top 10 news @ 11am
author img

By

Published : Mar 15, 2021, 12:02 PM IST

Updated : Mar 15, 2021, 12:12 PM IST

'அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது' - தமாகா வேட்பாளர் பேச்சு

அதிமுகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது என அதிமுக கூட்டணிக் கட்சியான தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜா கூறியுள்ளார்.

வாக்குப்பதிவு பணி தொடர்பாக தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்குப்பதிவு பணி தொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஏழாயிரத்து 905 அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

'சுருக்குமடி வலையின்மீது உள்ள தடையை நீக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்' - 5 மாவட்ட மீனவ மக்கள் தீர்மானம்

தமிழ்நாட்டில் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் உட்பட ஐந்து மாவட்ட மீனவ மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.

2.16 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

கோபி அருகே உரிய ஆவணங்களின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

’திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டின் வில்லன்’ - அர்ஜுன் சம்பத்

திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய வில்லன் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.

’கமல் விரைவில் புரிந்து கொள்வார்’ ; வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன், சினிமாவில் நடிப்பதற்கும், மக்கள் பணி புரிவதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை கமல் விரைவில் புரிந்து கொள்வார் எனத் தெரிவித்தார்.

யானை தாக்கி பெண் பலி

சத்தியமங்கலம் அருகே விறகு சேகரிக்கச் சென்ற பெண் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

டார்க் இணையதளத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞர்கள்

குஜராத்தில் இளைஞர்கள் மூன்று பேர் வெளிநாட்டு வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை டார்க் இணையதளம் மூலம் எடுத்து, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை வாங்கியுள்ளனர்.

நாமக்கல் தனியார் பல்பொருள் அங்காடியில் திடீர் தீ விபத்து!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சுமார் ஐந்து கோடி மதிப்பிலான பொருள்கள் தீக்கு இரையாகின.

கொடைக்கானலில் மிதிவண்டி திருடிய கேரள இளைஞர்கள் கைது!

கொடைக்கானலில் மிதிவண்டி திருடிய கேரள இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Last Updated : Mar 15, 2021, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.