ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Jan 30, 2021, 11:12 AM IST

1 நேபாளம்: தீராத நெருக்கடியில் உள்ள நாடு

நேபாளம் அரசியல் உறுதியற்ற தன்மையில், குறிப்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு கூட்டாட்சி, ஜனநாயக குடியரசாக தோன்றியதிலிருந்து ஒரு தீராத நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த உறுதியற்ற தன்மை அதன் சிதறிய அரசியல் நிலப்பரப்பு, உடையக்கூடிய அரசியலமைப்பு மற்றும் அதிகார வேட்கை அரசியல் தலைமை ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது.

2 நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

நாகப்பட்டினம்: சீர்காழி இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்த நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

3 எழுவர் விடுதலை, தமிழர்களின் உணர்வு சார்ந்தது - அமைச்சர் ஜெயகுமார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சர் கே. பழனிசாமி கடிதம் அளித்தார். அதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

4 இலங்கைக்கு கடத்த முயன்ற 88 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

ராமநாதபுரம் : 88 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இருவரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

5 அமித் ஷாவின் மேற்கு வங்க பயணம் திடீர் ரத்து; பின்னணி என்ன?

மேற்கு வங்க மாநிலத்திற்கு தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதை திடீரென ரத்து செய்துள்ளார்.

6 செல்பி எடுத்த சுற்றுலாப்பயணிகளை விரட்டிய காட்டெருமை!

திண்டுக்கல்: கொடைக்கானலில் செல்பி எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணிகளை காட்டெருமைகள் விரட்டியுள்ளன. இதனால் சுற்றுலாப்பயணிகள் அலறி ஓட்டம் பிடித்தனர். வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 செவிலியர்கள் போராட்டம் வாபஸ் - எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்

சென்னை: செவிலியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.

8 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 'ஊர்ந்து வந்தது உண்டா இல்லையா?' - மு.க. ஸ்டாலின்

வேலூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 'ஊர்ந்து வந்தது உண்டா இல்லையா?' என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

9 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் வழங்கும் பயனாளிகள் தேர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

10 புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக டி. விக்ரமன் நியமனம்

டி. விக்ரமன் புதுச்சேரி மாநிலத்தின் பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.