ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - மதியம் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm
author img

By

Published : Nov 9, 2021, 12:58 PM IST

1. எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் புகாரில் நிச்சயம் நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் புகாரில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. பருவமழை - காய்கறி விலையேற்றதால் மக்கள் அவதி!

தொடர் மழை காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

3. ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட் என்றால் என்ன?

மழைக் காலங்களில் விடுக்கப்படும் ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட் என்றால் என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

4. 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? - நீதிபதிகள் காட்டம்

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

5. தடுப்பூசி போடவில்லை என்றால் சம்பளம் இல்லை - மாநகராட்சி நிர்வாகம் கெடுபிடி

ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என தானே மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

6. யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர், பேராசிரியர்கள் நியமிக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கான முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணி நியமனத்துக்காக அறிவிக்கப்பட்ட தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. ஒன்றிய அரசை விமர்சித்து ஓவியம் - பாராட்டிய திருமாவளவன்

மோடி அரசை விமர்சித்து தீட்டிய ஓவியத்தை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

8. மதுபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நுழைந்தாரா முன்னாள் எம்பி?

நீலகிரியில் தீபாவளியன்று மதுபோதையில் நிர்வாணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் சென்றதாக கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்தவாறு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

9. அம்பானி வீட்டுக்கு கையில் பையுடன் வந்த இருவர்; பாதுகாப்பு அதிகரிப்பு

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா என்ற சொகுசு குடியிருப்புக்கு அருகே இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பையுடன் நடமாடியதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

10. பா.இரஞ்சித்துடன் கூட்டணி வைக்கும் கமல்ஹாசன்...?

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.