ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - top 10 news

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm
author img

By

Published : Nov 8, 2021, 1:03 PM IST

1. மழையால் கரண்ட் கட்டா? - இந்த எண்ணுக்கு அழைக்கலாம்!

மழையால் ஏற்படும் மின்பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க மின்னகம் 94987 94987 என்கிற எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

2. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் - படகு மூலம் மீட்பு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை படகு மூலம் பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

3. பணமதிப்பிழப்புக்கு பின்னும் உயர்ந்து வரும் ரூபாய் நோட்டுகளின் புழக்கம்!

இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, நவம்பர் 4, 2016 அன்று புழக்கத்தில் இருந்த நோட்டுகள் ரூ.17.74 லட்சம் கோடியிலிருந்து, அக்டோபர் 29, 2021 நிலவரப்படி ரூ.29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அக்டோபர் 30, 2020 நிலவரப்படி ரூ.26.88 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

4. எஸ்.பி.பி, பி.வி. சிந்து உள்ளிட்ட 119 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது

2020ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

5. மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

6. சென்னை மழை - 13 மீட்பு குழுக்கள் நியமனம்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 13 காவலர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

7. சென்னை மின்சார ரயில் வழக்கம் போல் இயங்கும்!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இன்று (நவ.8) இயங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

8. மலை வளத்தை பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

மேற்கு தொடர்ச்சி மலை வளத்தை பாதுகாப்பது தொடர்பாக செயல்திட்டம் உருவாக்குமாறு தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

9. எனது பிறந்த நாளுக்கு கேக் வெட்டாதீர்கள் - கமல்ஹாசன்

எனது பிறந்த நாளுக்காக கேட் வெட்டுவதை நிறுத்திவிட்டு, மக்களுக்கு சேவை செய்யுங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

10. 'மழை பிடிக்காத மனிதன்': விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் கூட்டணி!

'சலீம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை விஜய் மில்டன் இயக்க விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.