1. மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2. பணமோசடி: முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைது
100 கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதாக மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.
3. 2070க்குள் கரியமிலவாயு மாசு வெளியேற்றம் பூஜ்ஜியமாக்கப்படும் - பிரதமர் மோடி
2070ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கரியமிலவாயு வெளியேற்றம் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. தீபாவளிக் கொண்டாட்டம்: குழந்தைகளை வெளியில் அழைத்து வரவேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தீபாவளியையொட்டி, பொதுமக்கள் குழந்தைகளை வெளியில் அழைத்து வரவேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை - அவதியில் வாகன ஓட்டிகள்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் 66 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
6. 1.8 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.108.00 கோடி நிவாரண நிதி - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு ரூ. 6,000 வீதம் 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.108.00 கோடி நிவாரண நிதி வழங்க அரசாணைப் பிறப்பித்துள்ளது.
7. நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம், ரூ.7 லட்சம் பணம் வழிபறி
கோயம்புத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்க நகைகள், 7 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
8. யோகாசனம் மூலம் உலக சாதனை புரிந்த சிறுவர், சிறுமியர்கள்
தனியார் மஹாலில் ஒரே நேரத்தில் யோகாசனம் மூலம் உலக சாதனைகளைப் புரிந்து 5 சிறுவர், சிறுமியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
9. பாப்புக்கு இன்று பிறந்தநாள்
நகைச்சுவை நடிகர் பாலா சரவணன் இன்று 34ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களும்,திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
10. 'கியூட்டி தி பியூட்டி' பார்வையால் கிறங்கடிக்கும் பிரக்யா நாக்ரா!
கண்கவரும் அல்லி மொட்டு பிரக்யா நாக்ரா