ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm
author img

By

Published : Nov 1, 2021, 1:07 PM IST

1. வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

2. ’ஜனநாயக அடிப்படையில் உருவானவை நமது மாநிலங்கள்’ - ராகுல் காந்தி

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும், ஆறு மாநில உருவாக்க தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

3. மாநிலங்கள் உருவாக்க தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

1956ஆம் ஆண்டு பல்வேறு மாகாணங்களில் இருந்து மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

4. 600 நாள்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு: பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற அமைச்சர்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

5. கோவையில் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்ட மாணவர்கள்!

தமிழ்நாட்டில் சுமார் 600 நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று (நவ.01) திறக்கப்பட்ட நிலையில், இனிப்புகள் வழங்கியும் மலர்கள் கொடுத்தும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மாணவர்களை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்றார்.

6. உறவுக்கு வற்புறுத்திய மருமகனை கொன்ற மாமியார் கைது

வேப்பூர் அருகே கழுதூரில் உறவுக்கு வற்புறுத்திய மருமகனை கொன்று நாடகமாடிய மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

7. பலரின் தொடர் முயற்சியின் பலன்: வெற்றிகரமாக நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டம்!

பலரது தொடர் முயற்சியால் கிராம சபைக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, ராஜேந்திரபட்டினம் கிராம ஊராட்சியில் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

8. பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபர்கள் கைது

சென்னையில் பெண் காவலரிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட இரண்டு நபர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

9. மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்... முன்னால் கணவர் தலைமறைவு!

கணவரைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

10. HBD ஐஸ்வர்யா ராய்: ரோபோவையும் காதலில் விழ வைத்த உலக அழகி!

நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், திரைப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.