ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm
author img

By

Published : Oct 11, 2021, 1:04 PM IST

1. நீட் தேர்வு விண்ணப்பங்களைத் திருத்த காலக்கெடு நீட்டிப்பு

நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், மேலும் மூன்று நாள்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2. 'திராவிட மாடல்' நோக்கிச் செயல்படும் ஸ்டாலின் தலைமையிலான அரசு!

அனைத்துச் சமூகங்கள், பிரிவினர்கள் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் என்றும், அதை நோக்கியே திமுக அரசின் திட்டமிடுதல் இருக்கும் என்றும் தமிழ்நாடு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3. புதிய அவைத்தலைவர் குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் ஆலோசனை

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், புதிய அவைத்தலைவர் குறித்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

4. விஜயதசமி நாளன்று கோயில்கள் திறப்பு? - உயர் நீதிமன்றத்தில் மனு

வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கிற்கான மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

5.தமிழ் பாடப்புத்தகங்களில் கவிஞர் வேதநாயகம் பிள்ளை

கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மயிலாடுதுறையில் அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழ்சங்கத்தினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

6. ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்.. இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு தீவிரம்!

ஜம்மு காஷ்மீர் யூனியனின் இருவேறு பகுதிகளில் நடந்த என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

7. ஆர்யன் கான் பிணை மனு இன்று விசாரணை!

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் பிணை மீதான வழக்கின் விசாரணை இன்று மும்பை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

8. BB DAY 7: லைக், டிஸ்லைக் மூலம் பற்றவைத்த பிக்பாஸ்... தொடங்கும் புதுச்சண்டை

அமைதியாகச் சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில் லைக், டிஸ்லைக் கேம் மூலம் புதிய சண்டை ஒன்று தொடங்கியுள்ளது.

9. மீண்டும் கூட்டணி சேரும் லோகேஷ் கனகராஜ் - விஜய்

நடிகர் விஜய்யின் 67ஆவது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10. டி20 உலகக் கோப்பை - வெற்றிபெற்றால் 12 கோடி ரூபாய்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 12.02 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.