ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம்TOP 10 NEWS @ 1 PM - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm
author img

By

Published : Aug 18, 2021, 1:07 PM IST

1.கொடநாடு கொலை வழக்கில் என்னையும் சேர்க்க திமுக அரசு சதி - இபிஎஸ்

கொடநாடு கொலை வழக்கில் தன்னையும் சேர்க்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சதி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

2.இன்றும் நாளையும் அதிமுக சட்டப்பேரவையைப் புறக்கணிக்கும் - ஓபிஎஸ்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலிருந்து அதிமுக, பாமக, பாஜக வெளிநடப்புச் செய்துள்ள நிலையில், அதிமுக இன்றும் நாளையும் சட்டப்பேரவையைப் புறக்கணிக்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

3.கரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 440 பேர் பலி

இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 440 பேர் உயிரிழந்துள்ளனர்.

4.293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டேன் - நித்தியானந்தா அறிவிப்பு

மதுரை ஆதீனத்தின் 293ஆவது பீடாதிபதியாக தான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக நித்தியானந்தா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

5.சமூகநீதியை இந்தியா முழுவதும் நிறைவேற்றியது மோடிதான் - எல். முருகன் பெருமிதம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பட்டியலினத்தைச் சேர்ந்த 12 பேரை மத்திய அமைச்சர்களாக்கி இருக்கிறார். சமூகநீதியை இந்தியா முழுவதும் நிலைநாட்டியது மோடிதான் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

6.இன்று நிழலில்லா நாள் - மறக்காம பாருங்க!

ஆண்டுக்கு இருமுறை சூரியன் உச்சிக்கு வரும் 'நிழலில்லா நாள்' இந்தாண்டில் இரண்டாவது முறையாக இன்று (ஆகஸ்ட் 18) நிகழ்கிறது.

7.நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்க ஐஐடி மெட்ராஸில் இருக்கை அமைப்பு

நடைபாதை பொறியியல், நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்புகள் ஆகியவற்றில் ஆய்வுமேற்கொள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை ஐஐடியில் இருக்கை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

8.சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசி தரூர் விடுவிப்பு

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கிலிருந்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.

9.தீபாவளியன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

நடிகர் விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் தீபாவளியன்று வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10.தெலுங்கில் ரீமேக்காகும் ’நெற்றிக்கண்’ - கதாநாயகி இவரா?

'நெற்றிக்கண்' தெலுங்கு ரீமேக்கில் நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.