ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM

author img

By

Published : Mar 18, 2021, 12:59 PM IST

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ..

1 மணி செய்திச் சுருக்கம்
Top 10 news @ 1PM

முதன்முறையாக மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், 36 வயது பெண்ணிற்கு பொருத்தப்பட்டு சாதனை!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதன்முறையாக மதுரையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் இதயம், 36 வயது பெண்ணிற்குப் பொருத்தப்பட்டு, அவரது உயிரை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளிடமிருந்து ஒரு வாக்காவது வாங்க முடியுமா...ஸ்டாலினுக்கு பழனிசாமி சவால்!

திருவாரூர்: விவசாயிகளிடமிருந்து ஒரு வாக்காவது வாங்க முடியுமா என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

ஏஎஸ்பி வெள்ளத்துரை திடீர் இடமாற்றம்: மனைவி தேர்தலில் போட்டி காரணமா?

திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் ஆணையராக இருந்த வெள்ளத்துரை சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

'சர்வதேச சோலார் கூட்டணி' - இந்தியா-இத்தாலி ஒப்பந்தம்

சர்வதேச சோலார் கூட்டணி திட்டத்திற்காக இந்தியா-இத்தாலி அரசுகள் சார்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தனுஷின் கர்ணன் படத்திற்கு தடைக்கோரி வழக்கு!

மதுரை: தனுஷ் நடித்து ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

'தமிழ்நாடு மக்களின் சொத்து, இங்கு வாரிசு அரசியலுக்கு இடமில்லை' - சி.டி.ரவி பேச்சு

விருதுநகர்: "தமிழ்நாடு என்பது மக்களின் சொத்து. இங்கு வாரிசு அரசியலுக்கு இடமில்லை. சில குடும்பங்கள் தமிழ்நாடு அவர்களின் சொத்து என நினைத்துக் கொண்டுள்ளனர். மாநிலம் முன்னேற வேண்டுமே தவிர, சில குடும்பங்கள் மட்டும் முன்னேறக் கூடாது" என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி கடற்கரையில் கடைகள் கட்டுமானப் பணிகள் தொடரக்கூடாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி திருவேணி சங்கம பகுதிகளில் கட்டப்பட்டுவரும், கடைகள் கட்டுமானப் பணிகளை தொடரக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மநீம கட்சி தமிழ்நாடு, புதுவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சென்னை : தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஆறு தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மார்ச். 17) வெளியிடப்பட்டது.

"ரோபோட்" 3.0: தேர்தலில் போட்டியிடவில்லை - அர்ஜுனமூர்த்தி அறிவிப்பு

ரஜினியின் நெருங்கிய நண்பரான அர்ஜுனமூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

கடவுள் சொன்னதால் பாட்டியை கல்லால் அடித்து கொன்ற மாணவர் - ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்

கடவுள் சொன்னதால் பாட்டியை கொலை செய்தேன், என்னை தடுத்தால் உங்களையும் கொலை செய்துவிடுவேன் என்று கூறி தனது சொந்த பாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.