ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Jan 26, 2021, 1:11 PM IST

1 பாப்பம்மாள் போராட்டங்களில் முன் நிற்பவர்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பாப்பம்மாள் அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர்; கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2 டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

டெல்லி: அனுமதி வழங்கப்பட்ட இடத்தை விட்டு டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

3 பத்ம விபூஷண் விருதைப் பெற்ற ஜாம்பவான்கள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மறைந்த நரிந்தர் சிங் கபானி, சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹோ உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

4 இஸ்ரோ விஞ்ஞானியின் தந்தை காலமானார்!

கோயம்புத்தூர்: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தந்தை இன்று (ஜன.26) காலமானார்.

5 டெல்லி பேரணி... விவசாயிகள் மீது தடியடி: தலைநகரில் பதற்றம்

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பும், பதற்றமும் நிலவிவருகிறது.

6 ஜெயலலிதா விழா நடத்தலாம் கிராமசபை கூட்டம் கூடாதா? - கமல் கேள்வி

சென்னை: ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராமசபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

7 பத்ம விருதுகளில் ஜொலிக்கும் தமிழர்கள்

பொது வாழ்க்கை, சமூக சேவை, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், கலை - இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த 119 பேருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டை சேர்ந்த சாலமன் பாப்பையா, பி. அனிதா (விளையாட்டு), பாம்பே ஜெயஸ்ரீ (கலை) உள்ளிட்ட 11 பேருக்குப் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

8 இந்த தீபாவளி நம்ம 'அண்ணாத்த' தீபாவளி...!

சென்னை: ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

9 பத்ம ஸ்ரீ விருது பெற்ற விளையாட்டு வீரர்கள்!

விளையாட்டு துறையில் சிறந்த விளங்கியதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை அனிதா பால்துறை உள்பட ஏழு பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம ஸ்ரீ விருது பெரும் விளையாட்டு வீரர்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்...!

10 'உங்கள் நிறுவனத்தை விட சிறந்த தொழில்நுட்பம் வைத்துளோம்' - கூகுளுக்கு எலான் மஸ்க் பதில்!

கூகுளின் தானியங்கி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான வேமோவின் தலைமை செயல் அலுவலர் டெஸ்லா நிறுவனம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு, “உங்கள் நிறுவனத்தை விட, டெஸ்லா அதிசிறந்த தொழில்நுட்பங்களையும், வன்பொருளையும் கொண்டுள்ளது” என்று எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.