ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 pm - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்
author img

By

Published : Mar 4, 2021, 9:37 PM IST

1 வாழ்வதற்கு எளிமையான நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற சென்னை!

மக்கள் தொகை ஒரு கோடிக்கும் மேல் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தையும் சென்னை 5ஆவது இடத்தையும் கோவை 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

2 ‘புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும்’

புதுச்சேரி: தற்போதுள்ள கருத்துக்கணிப்பின் அடிப்படையில் புதுச்சேரியில் 30-க்கு 30 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என பாஜக மாநிலத் தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

3 ராணுவ சேவை நாட்டிற்குத் தேவை: பாதுகாப்புப் படைக்கு கிராமம் தரும் சேவை!

தாவனகெர்: கர்நாடக மாநிலம் தாவனகெர் நகரத்திலுள்ள தோலாஹனசே என்ற கிராமத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் இந்தியப் பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர்.

4 முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - பிரமாணப் பத்திரம் தாக்கல்!

முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பானது என மத்திய நீர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

5 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நனவாக்கிய எஸ்பி!

அமராவதி: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை அறிந்த, குண்டூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்தது பாராட்டைப் பெற்றுவருகிறது.

6 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் போக்சோவில் கைது

திருப்பூர்: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களை போக்சோ சட்டத்தில் திருப்பூர் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

7 உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.69 லட்சம் ரூபாய் பறிமுதல்

ராணிப்பேட்டை: காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.69 லட்சம் ரூபாயை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல்செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

8 தேர்தல் முன்னெச்சரிக்கை: 100 ரவுடிகள் கைது!

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு மண்டலத்தில் 100 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

9 பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க 6-க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலர்கள் புகார்

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி ஆறுக்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலர்கள் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தனர்.

10 ஆம்பூர் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கரோனா... சக மாணவர்களுக்கு பரிசோதனை

திருப்பத்தூர்: ஆம்பூரில் பள்ளி மாணவன் ஒருவருக்கு கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் பயிலும் 51 மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.