ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @ 9 pm - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @ 9 pm

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 9 PM
TOP 10 NEWS 9 PM
author img

By

Published : Jan 2, 2021, 9:09 PM IST

1.கோவாக்சின் தடுப்பூசி: அவசரகால அனுமதிக்குப் பரிந்துரை

டெல்லி: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி, மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

2.'சமூக நீதி குறித்து பேச திமுகவினருக்கு தகுதியில்லை' - எல்.முருகன் விமர்சனம்

திருப்பத்தூர்: சமூக நீதி குறித்து பேச திமுகவினருக்கு தகுதியில்லை என, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

3.கரீப் பருவச் சந்தை 2020: 487.92 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

டெல்லி: நடப்பு கரீப் பருவச் சந்தை மூலம் தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

4.கங்குலியின் உடல்நிலை குறித்த அறிய நேரில் சென்ற மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று கேட்டறிந்தார்.

5.’முதலமைச்சரை மறிப்போம்’ - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

சென்னை: நாளை முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் திமுகவினர் மறித்து கேள்வி எழுப்புவார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6.முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சுவரொட்டி - வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்!

சண்டிகர் : பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சுவரொட்டியை ஒட்டிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொகாலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

7.தஞ்சையை நோக்கி ஜனவரி 9ஆம் தேதி நீதி கேட்டு விவசாயிகள் நெடும் பயணம் - பி.ஆர்., பாண்டியன் அறிவிப்பு!

ஜனவரி 9 ,10 ஆகிய தேதிகளில், வேதாரணயத்தில் இருந்து தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை நோக்கி விவசாயிகள், நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

8.ராப்பத்து 9ஆம் நாள்: ஸ்ரீரங்கத்தில் முத்து சாய் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

திருச்சி: ராப்பத்து ஒன்பதாம் திருநாளான இன்று (ஜன. 02) ஸ்ரீரங்கத்தில் முத்து சாய் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

9.'திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் ஆட்சி மாற்றத்துக்கானது' - செந்தில் பாலாஜி

கரூர்: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கான மக்கள் கிராம சபை கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது என, அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறினார்.

10.களமிறங்கிய ஒப்போ ரெனோ 5 - சிறப்பம்சங்கள் என்னென்ன!

சீனாவின் பிபிகே நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஒப்போ, ரெனோ 5 எனும் கைப்பேசியை ஸ்னாப்டிராகன் 720 ஜி ப்ராஸசர், 44 எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.