மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு : அரசாணை வெளியீடு
சென்னை : அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தேவருக்காக கூட்டணி அமைத்த திமுக - அதிமுக
மதுரை: தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே விமானத்தில் மதுரை சென்றனர்.
இசஞ்சீவினி திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: இசஞ்சீவினி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பெண்ணைத் தாக்கிய திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!
திருவள்ளூர்: கிணறு தோண்டும் பிரச்னையில் பெண்ணைத் தாக்கி தகாத வார்த்தையில் திட்டிய திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சார்லார்லக்ஸ் ஓபன் தொடரிலிருந்து இந்திய அணி விலகல்!
இந்திய அணியின் பேட்மிண்டன் பயிற்சியாளரும், லக்ஷயா சென்னின் தந்தையுமான டிகே சென்னிற்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டத்தைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் அணி சார்லார்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகியது.
“கோவிட் பெருந்தொற்றை சிறப்பாக கையாண்ட இந்தியா”- உலக சுகாதார அமைப்பு பாராட்டு
கோவிட் பெருந்தொற்றை சிறப்பாக கையாண்ட இந்தியா என்று உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குநர் மருத்துவர் பூணம் கேத்ரபால் சிங்கை, ஈடிவி பாரத் செய்தியாளர் கௌதம் துபே நடத்திய பிரத்யேக நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐசிடி துறை : இந்தியா-ஜப்பான் இடையில் புதிய ஒப்பந்தம்!
டெல்லி : தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ஐ.சி.டி) துறையில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
என்ன மொபைல் பா இது! கிறங்கடிக்கும் வடிவமைப்புகளுடன் வெளியான எல்ஜி நிறுவனத்தின் விங், வெல்வெட்!
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புது வரவாக அமைந்துள்ளது விங், வெல்வெட் ஆகிய இரு ஸ்மார்ட் கைபேசிகள். இரண்டு திரைகள் கொண்ட கைபேசி ஒன்று என்றால் மற்றொன்றோ சுழல் திரை அமைப்புடன் வெளிவந்து பயனர்களை கிறங்கடித்துள்ளது.
காலாண்டில் ரூ.1,195 கோடி இழப்பைச் சந்தித்த இண்டிகோ!
இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர் குளோப் ஏவியேஷன், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ .1,194.8 கோடி நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. இது கடந்த இதே காலாண்டில் ரூ .1,062 கோடி இழப்பை விட அதிகமாகும்.
ராணா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த கேகேஆர்!
சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங்ஸ் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை குவித்தது.