ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 9 AM - 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-9-am
top-10-news-9-am
author img

By

Published : Aug 29, 2021, 9:25 AM IST

1. பாலம் கட்டுமான விபத்து - சரமாரி கேள்வி எழுப்பிய பிடிஆர்

மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் - பிஆர் பாண்டியன் வரவேற்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிரான அரசின் தீர்மானத்தை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் வரவேற்றுள்ளார்.

3. பாரா ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் பவினாபென் படேல்

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

4. சிறுவனை கடத்தி பட்டினி போட்ட கொடூரம்... 6 நாள்களுக்கு பிறகு மீட்பு

சேலத்தில் பணத்திற்காகக் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன், ஆறு நாட்களுக்குப் பிறகு தனிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

5. 75ஆவது சுதந்திர தினம்; ஜார்க்கண்ட் பழங்குடியினர் கிளர்ச்சி!

ஜார்க்கண்ட் பழங்குடியினர் அம்பு மற்றும் வில் போன்ற பாரம்பரிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணர்களாக இருந்தனர். இவர்கள் கொரில்லா போரிலும் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

6. மேகதாது விவகாரம்; கர்நாடக அரசின் திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

7. கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு!

செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் மாவட்டவாரியாக 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு முழுமையான கரோனா தடுப்பூசி செலுத்திடும் விதமாக சிறப்பு முகாம்கள் நடத்திட பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

8. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற 10 நாள்கள் கெடு- சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி ஆலோசனை கூட்டத்தில் வணிக சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற 10 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

9. ஹிட்லர் வியந்த மேஜர் தயான் சந்த்!

மேஜர் தயான் சந்த் ஹாக்கி ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர் அவரை ஜெர்மனிக்கு அழைத்தார். அவரின் அழைப்புக்கு புன்னகையுடன் மறுப்பு தெரிவித்த தயான் சந்த், “நான் இந்தியன், ஒருபோதும் விலை போக மாட்டேன்” என்று பதிலுரைத்தார்.

10. மாலத்தீவில் மாடர்ன் மோனலிசா கிளிக்ஸ்

நீயும் நானும்... மாலத்தீவை கொஞ்சும் மோனலிசா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.