ஓராண்டாக வேலையில்லை, நிலைமை படுமோசம்- டெல்லி திரும்பிய குடிபெயர் தொழிலாளி வேதனை!
கடந்த ஓராண்டாக எந்த வேலையும் இல்லை, நிலைமை படுமோசமாக உள்ளது என டெல்லி திரும்பிய குடிபெயர் தொழிலாளி ஈடிவி பாரத்திடம் வேதனை தெரிவித்தார்.
அரசு பங்களாவைக் காலி செய்தார் ஓபிஎஸ்!
சென்னை: பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அரசு பங்களாவைக் காலி செய்து, புதிய வீட்டிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குடியேறினார்.
தென்மேற்கு பருவமழை : தமிழ்நாடு, புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!
புதுடெல்லி: தென்மேற்கு பருவமழையில் முன்னேற்றம் காணப்படுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று(ஜூன்.4) முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலைத்துறை தெரிவித்துள்ளது.
"நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா விற்கப்படும்" அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி!
நடப்பாண்டு(2021) இறுதிக்குள் ஏர் இந்தியா தனியாருக்கு விற்கப்படும் என, ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சசிகலா அமமுக தொண்டர்களிடம்தான் பேசுகிறார்- எடப்பாடி பழனிசாமி
சசிகலா அதிமுகவில் இல்லை, அவர் அமமுக தொண்டர்களிடம்தான் பேசுகிறார் என அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 19-ஆவது கரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு?
சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்த சுகாதாரத்துறை அலுவலர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Go Green - தெற்கு ரயில்வேயின் புதிய திட்டம்
தெற்கு ரயில்வே Go Green என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் டீசல் என்ஜின்கள் பயன்பாட்டை குறைத்து, மின்சார என்ஜின்கள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான வர்த்தக விலை உச்ச வரம்பு நிர்ணயம் - மத்திய அரசு!
கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க, மாற்றியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட (எம்ஆர்பி) ஆக்சிஜன் செறிவூட்டிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா என்பதை மாநில மருந்து விலை கட்டுப்பாட்டாளர்கள் கண்காணிக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவிட் தொற்றால் பிரபல பேக் கடை மூடல்
சென்னை: கோவிட் பாதிப்பு, ஊரடங்கால் சென்னையைச் சேர்ந்த பிரபல சில்லறை பை விற்பனை நிறுவனமான விட்கோ தனது கடைகளை மூட முடிவு செய்துள்ளது.