ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM - chennai news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 19, 2021, 3:38 PM IST

முடிவுக்கு வந்த 'பறக்கும் சீக்கியரின்' ஓட்ட பயணம்!

ஆசிய, காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஒரே இந்தியத் தடகள வீரரான பறக்கும் சீக்கியர் மில்கா சிங்கின் ஓட்ட பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

தொடங்கியது கோலி vs கேன் பலப்பரீட்சை: இந்தியா பேட்டிங்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

'மேகதாது அணை விவகாரத்தில் கோட்டைவிட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்

மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கோட்டை விட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

’அவசரத்துல யூனிபார்ம் மறந்துட்டேன்’..; காவலரின் தர்பூசணி திருட்டு

பூந்தமல்லியில் பணியில் இருப்பதை மறந்து காவல் சீருடையில் தர்பூசணியை திருட ஆர்வம் காட்டிய வைரல் காணொலியை கண்ட நெட்டிசன்கள், காவலரின் செயலை, நடிகர் வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கும் ராகுல் - உதயநிதி வாழ்த்து

52ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிரோன் கேமரா மூலம் கோயில் சொத்துக்களை கண்டறியும் அறநிலையத் துறை

கோயில் சொத்துக்களை டிரோன் கேமரா மூலம் புவி சார்ந்த தகவல் அடிப்படையில் கண்டறிந்து வருவதாகவும், இந்த பணி விரைவில் முடிக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Most Eligible Bachelor ராகுல் காந்திக்கு பிறந்தநாள்

சில்வர் ஸ்பூன் வளர்ப்பு என பரவலாக பேசப்பட்டாலும், தான் மக்களுக்கான தலைவர் என்று நிரூபிக்க இடைவிடாமல் போராடி வருகிறார், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி. அவரது பிறந்தநாளான இன்று கடந்த காலப் பயணங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

'அந்த மனசுதான் சார்' - டெலிவரி பாய்க்கு 'பைக்' வாங்கிக் கொடுத்த வாடிக்கையாளர்

உணவு டெலிவரி செய்வதற்காக 9 கி.மீ. சைக்கிளில் வந்த டெலிவரி பாய் குறித்து வாடிக்கையாளர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு நிதி திரட்டி பைக் வாங்கிக் கொடுத்தது பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.

இலங்கைத் தமிழர்களின் குடும்பத்திற்கு கரோனா நிவாரணம்: தொடங்கி வைத்த ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பத்திற்கு கரோனா நிவாரணத் தொகையாக நான்காயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கங்கையில் கிடந்த சடலங்களை அப்புறப்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

கங்கை ஆற்றில் கிடந்த உடல்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ், நீதிபதி பிரகாஷ் பாடியா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடிசெய்தது. முறையாக ஆய்வுசெய்யாமல் பொதுநல வழக்கு என்ற பெயரில் அணுகிய மனுதாரர் மீது நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.