ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - etv bharat latest news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-3-pm
top-10-news-3-pm
author img

By

Published : Jul 31, 2020, 3:02 PM IST

கந்தசஷ்டி விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

சென்னை; மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு இலவச சந்தன கட்டைகளை வழங்கிய முதலமைச்சர்

சென்னை: நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 20 கிலோ சந்தனக் கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 31) நாகூர் தர்கா நிர்வாகக் குழு நிர்வாகி கே. அலாவுதீனிடம் (ஓய்வு) வழங்கினார்.

129 நாள்களில் 9 லட்சம் பேர் கைது - தமிழ்நாடு காவல்துறை

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 129 நாள்களில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 70 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூரில் 95.62 விழுக்காடு தேர்ச்சி - ஆட்சியர் பெருமிதம்

திருவள்ளூர்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.62 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

கிராமப்புற மாணவர்கள் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்

ஆன்லைன் மூலம் கல்வி கற்க இயலாத கிராமப்புற மாணவர்களுக்கு நேரில் சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியர் மகாலட்சுமி பற்றி சிறப்பு தொகுப்பு...

பக்ரீத் நாளில் நம்மை நாமே தூய்மையாக்கிக் கொள்ள துணிவோம் - அதிமுக

சென்னை: பக்ரீத் திருநாளில் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் அன்பும், அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டுமென அதிமுக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை வன்புணர்வு செய்து கொலைசெய்த வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார், அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகியோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விராட் கோலி, தமன்னாவை கைது செய்ய கோரி வழக்கு!

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவிட்-19 தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு ரத்த உறைவு கோளாறு வரும் அபாயம்!

கரோனா பரவுவது குறித்த கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் உடன் சேர்ந்து ஆராய்ச்சியாளர்கள் சிலர், கோவிட் - 19 தாக்கம் கர்ப்பிணிகளின் உடலில் ரத்த உறைவு கோளாறை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விதைகளால் ஆன ராக்கிக்கு படு கிராக்கி!

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மக்கும் தன்மைக் கொண்ட பொருள்களால் ஆன ராக்கி கயிறுகளை மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் உருவாக்கியிருக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.