ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM - latest news

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM

author img

By

Published : May 31, 2021, 11:38 AM IST

காற்றில் பரவும் வீரியமிக்க புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!

ஹனோய்: வியட்நாமில் அதிக வீரியமிக்க உருமாறிய புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா, இங்கிலாந்தில் முதலில் காணப்பட்ட உருமாறிய வைரஸ்களின் கலப்பினம் ஆகும். இந்த வைரஸ் காற்றில் வேகமாகப் பரவக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சரிவைச் சந்தித்துவரும் கரோனா பாதிப்பு!

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'ஈவு இரக்கமின்றி நாயை கொலை செய்த நபர்' - வைரல் வீடியோ

புவனேஷ்வர்: பழி தீர்க்கும் பொருட்டு தெரு நாயை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த நபர் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'ஸ்டாலின் இங்கே. மோடி எங்கே?' - ஜோதிமணி கேள்வி

"தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இங்கே. பிரதமர் நரேந்திர மோடி எங்கே?" என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பலாப்பழ சீசன் தொடக்கம்: வாகன ஓட்டிகளை விரட்டும் ஒற்றை யானை!

நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியார் பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, யானைகள் பழங்களை உண்பதற்காக, அப்பகுதியில் படையெடுத்து வருகின்றன. கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் பழங்குடியினர் குடியிருப்பு அருகே முகாமிட்டிருந்த நிலையில், தற்போது ஒற்றை யானை மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிகிறது. இந்த யானை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை லாவகமாக மேலிருந்து இறங்கி, அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது

அண்ணா பல்கலை., துணைவேந்தர் பதவி: விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு, ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என, தேடுதல் குழு அறிவித்துள்ளது.

பிபிஇ கிட்களை துவைத்த தொழிலாளர்கள் - அதிர்ச்சி வீடியோ

மத்திய பிரதேசத்தில் கரோனா வார்டில் மருத்துவ ஊழியர்கள் அணிந்த பிபிஇ கிட்களை மறுவிற்பனைக்காக பயன்படுத்த தொழிலாளர்கள் சிலர் துவைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து இது குறித்து உரிய விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இனி எல்லாமே டோர் டெலிவரி!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே.31) முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், காய்கறிகளைப் போன்று, மளிகைப் பொருள்களும் வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறைந்தது கரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாகவே கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.