ETV Bharat / state

பி.இ, பி.டெக், இளங்கலை அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - Government college admission

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் சேரவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்ய நாளை கடைசி நாளாகும்.

மறந்து விடாதீர்கள்.. பொறியியல், கலை மற்றும் அறிவியில் படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

author img

By

Published : Jul 26, 2022, 7:34 PM IST

Updated : Jul 26, 2022, 8:32 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு, கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. அப்போது விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக ஜூலை 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதியை மாற்றி, சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாள்கள் அவகாசத்தை நீட்டித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 22 ஆம் தேதி வெளியானது.

எனவே பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜூலை 27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும் அடுத்த இரண்டு நாட்களுக்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 25 ஆம் தேதி மாலை 6 மணி வரையில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 2,04,151 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். இவர்களில் 1,57,932 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளனர்.

அதில் 1,43,207 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டை விட அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 26 ஆம் தேதி வரையில் 4,01,494 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 3,30,132 பேர் விண்ணப்பங்களை முழுவதும் பதிவேற்றியுள்ளனர். அதில் 2,93,912 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாணவர்கள் பற்றாக்குறையால் 40 அரசுப்பள்ளிகள் மூடல்; ஆர்.டி.ஐ-யில் கிடைத்த அதிர்ச்சித்தகவல்!

Last Updated : Jul 26, 2022, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.