சென்னை: தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பருவமழை தொடங்கியது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை (Tomato Price) கிலோவுக்கு ரூ.180 வரை விற்கப்பட்டது.
இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தக்காளியின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் மக்கள் அரசுக்கு வலியுறுத்தினர். தொடர்ந்து, பசுமைப் பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70, ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தன.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் இன்று (நவம்பர் 25) தக்காளி விலை கிலோவிற்கு 40 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: School Leave : 18 மாவட்டங்களில் மழை - பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!