சென்னை:
- மாவீரன் 3வது பாடல் இன்று வெளியாகிறது
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மாவீரன். இந்தப் படத்தின் மூன்றாவது பாடலா ‘வா வீரா’ என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிதீ ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ஏற்கனவே வெளியான சீனா சீனா, வண்ணாரப்பேட்டையிலே ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. வரும் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓடிடியில் வெளியானது ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ஃபர்ஹானா. ஒரு கட்டுப்பாடுள்ள இஸ்லாமிய பெண் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. படம் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்றது. இதில் செல்வராகவனின் வித்தியாசமான நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில் ஃபர்ஹானா திரைப்படம் இன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
‘கொலை’ வெளிநாட்டு உரிமை யாருக்கு?
Infiniti Film Ventures நிறுவனம், Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி கே குமார் எழுதி இயக்கும் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கொலை’. இந்த சஸ்பென்ஸ் திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை TentKotta நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது.
- மாவீரனுக்கு குரல் கொடுக்கும் தனுஷ்?
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம், மாவீரன். இப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. ஃபேண்டஸி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சில காட்சிகளில் வாய்ஸ் ஓவர் கொடுக்க தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது. ஆனால் இருவரும் பிஸியாக இருப்பதால் மறுத்து விட்டனர். இந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷ் குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தனுஷ் குரல் கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் அடிக்கடி மேலே பார்ப்பார் அப்போது ஒரு குரல் இவருக்கு கேட்கும் இந்த குரல்தான் தனுஷ் கொடுத்திருப்பார் என கூறப்படுகிறது. இதை இயக்குநர் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
- நாளை ‘அநீதி’ இசை வெளியீடு
வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடித்துள்ள படம் அநீதி. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தில்தான் ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக அறிமுகமானார். தற்போது இந்த கூட்டணியில் அநீதி திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தை தனது நண்பர்களுடன் இணைந்து வசந்தபாலன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Jailer First Single: இணையத்தை கலக்கும் ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடல்!