தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யும் என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கொடைக்கானலில் எட்டு செ.மீ. மழைப்பொழிவும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழு செ.மீ. மழைப்பொழிவும் குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, சேலம், மதுரை, திண்டுக்கல்லின் ஒருசில பகுதிகளில் ஒரு செ.மீ. மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க:அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஏழு மாவட்டங்களில் மழை!