ETV Bharat / state

தமிழகம், புதுவையில் மழை வெளுத்து வாங்கப் போகுது! - வானிலை மையம் எச்சரிக்கை! - rain at chennai

Today weather report: தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 3:50 PM IST

சென்னை: தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (அக். 15) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அக்-17ஆம் தேதி: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் அக்டோபர் 17 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நவராத்திரி விழா; திருவனந்தபுரம் புறப்பட்ட 3 சாமி விக்கிரகங்களுக்கு கேரள காவல்துறை அணிவகுப்பு!

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக் கூடும் என கூறப்பட்டு உள்ளது.

மழைப்பதிவு: அதிகபட்சமாக தேக்கடியில் 10 செ.மீ மழையும், களியல் பகுதியில், 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. திற்பரப்பு, பேச்சிப்பாறை பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும் மணமேல்குடி, தென்காசி, மீமிசல் பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

பாலமோர் (கன்னியாகுமரி), வாடிப்பட்டி (மதுரை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), சத்தியார் (மதுரை) ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் வழங்கவில்லை.. ஊராட்சி மன்றத் தலைவர்களை கண்டித்து மக்கள் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.