ETV Bharat / state

அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்! - அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

TN Rain Update:அடுத்த 3 நாட்களுக்கு கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 4:47 PM IST

Updated : Sep 29, 2023, 6:06 PM IST

சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்.29) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதேபோல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடலில், மியான்மர் கடற்கரைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல், அரபிக்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் தற்போது, மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் பருவநிலை எப்படி இருக்கும்? அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழைப்பதிவு: காஞ்சிபுரம், வால்பாறை, கோவை, ஈரோடு, தேனி, தென்காசி, நாகை, தர்மபுரி, தஞ்சை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் 5.செ.மீ முதல் 3 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது. இதேபோல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் 2 செ.மீ முதல் 1 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை, தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய - வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனைத்தொடர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்ட 25 மருத்துவர்களுக்கு உடல்நலக்குறைவு.. லக்னோவில் நடந்தது என்ன?

Last Updated : Sep 29, 2023, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.