ETV Bharat / state

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! - வானிலை செய்தி

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 2:28 PM IST

சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் 6 ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் நாளை(நவ.4) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை: வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை மிகக் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு உள்ள இடங்கள்: இன்று (நவ.03) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நவம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவம்பர் 6 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், ஒருசில சமயங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

24-மணி நேரத்தில் மழைப்பதிவு: கடந்த 24- மணி நேரத்தில் அதிகபட்சமாக, சிதம்பரம் AWS (கடலூர்) 8 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது, இதேப்போல், அண்ணாமலை நகர் (கடலூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 7செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது, , களியல் (கன்னியாகுமரி), திருப்பூர் தெற்கு, நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 6செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில், . நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி திருவள்ளூர், தஞ்சை, கடலூர், கன்னியாகுமரி, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட சில மாவ்ட்டங்களில் ஒருசில இடங்களில் மழைப்பதிவாகி உள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: குற்றாலம் மெயின் அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.