சென்னை: கரோனா பாதிப்பின் இன்றைய (ஆகஸ்ட் 2) நிலவரத்தின் புள்ளி விவரத் தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
புதிய பாதிப்பு
அதில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1 லட்சத்து 44ஆயிரத்து 632 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து 1,952 நபர்களுக்கும், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 2 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்த 2 நபர்களுக்கும், பிகாரில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 1,957 நபர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சைப் பெற்று வருவோர்
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 68 லட்சத்து 75ஆயிரத்து 435 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 25 லட்சத்து 63ஆயிரத்து 544பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் சுமார் 20ஆயிரத்து 385 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், மேலும் குணமடைந்த 2,068 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 9ஆயிரத்து 29 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 23 நோயாளிகளும் என மேலும் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 130 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை | 5,38,521 |
கோயம்புத்தூர் | 2,29,804 |
செங்கல்பட்டு | 1,62,215 |
திருவள்ளூர் | 1,13,622 |
சேலம் | 93,562 |
திருப்பூர் | 87,985 |
ஈரோடு | 94,042 |
மதுரை | 73,540 |
காஞ்சிபுரம் | 71,797 |
திருச்சிராப்பள்ளி | 72,567 |
தஞ்சாவூர் | 68,102 |
கன்னியாகுமரி | 60,158 |
கடலூர் | 60,573 |
தூத்துக்குடி | 55,118 |
திருநெல்வேலி | 47,935 |
திருவண்ணாமலை | 52,140 |
வேலூர் | 48,111 |
விருதுநகர் | 45,525 |
தேனி | 42,952 |
விழுப்புரம் | 43,907 |
நாமக்கல் | 47,315 |
ராணிப்பேட்டை | 41,998 |
கிருஷ்ணகிரி | 41,424 |
திருவாரூர் | 37,921 |
திண்டுக்கல் | 32,222 |
புதுக்கோட்டை | 28,180 |
திருப்பத்தூர் | 28,289 |
தென்காசி | 26,868 |
நீலகிரி | 30,617 |
கள்ளக்குறிச்சி | 29,160 |
தருமபுரி | 26,165 |
கரூர் | 22,669 |
மயிலாடுதுறை | 21,088 |
ராமநாதபுரம் | 20,052 |
நாகப்பட்டினம் | 18,729 |
சிவகங்கை | 18,836 |
அரியலூர் | 15,817 |
பெரம்பலூர் | 11,497 |
போக்குவரத்து மூலம் பாதிப்பு
கரோனாவால் சர்வதேச விமானத்தில் வந்த 1,015 பயணிகளும், உள்நாட்டு விமானத்தில் வந்த 1,078 பயணிகளும், ரயில் மூலம் வந்த 428 பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.