ETV Bharat / state

பேச்சாற்றலை இன்று ஆயுதமாக பயன்படுத்த உள்ள ராசிகள்! - ஜோதிடம்

January 13 2024 Rasipalan: மார்கழி 28, ஜனவரி 13 சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 6:22 AM IST

மேஷம்: இன்று இன்னொரு மும்முரமான நாள். அலுவலகத்திலும், வீட்டிலும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான சிரமத்தை மேற்கொண்டிருப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு சில சலுகைகள் அளிக்கக்கூடும். இது ஓரளவுக்கு உங்களை சாந்தப்படுத்தும். வயதில் மூத்தவர்களிடமிருந்து மதிப்புக்குரிய வழிகாட்டுதல்களை நீங்கள் பெறுவீர்கள்.

ரிஷபம்: இன்று நீங்கள் உங்களது நண்பர்களுடன், உங்களது சாதனையை எடுத்துரைக்கும் வகையிலான வெற்றி விழாவை கொண்டாடுவீர்கள். வர்த்தகத்திலும், அலுவலகத்திலும் உங்களது முற்போக்கான சிந்தனையின் மூலம், வளமான எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்துவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குதூகலமாக இருப்பீர்கள்.

மிதுனம்: உங்களது நிதி நிலைமை அல்லது சொத்துக்கள் குறித்த கவலை உங்களுக்கு இருக்கும். சிறிது பணம் நெருக்கடி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சாதாரண பிரச்னை கூட உங்கள் மனதை பாதிக்கும். நிதி விஷயங்கள் தொடர்பாக, நீங்கள் சில முடிவுகளை எடுக்கக் கூடும். மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, உற்சாகமாக செயல்படவும்.

கடகம்: மக்கள் உங்களை சூழ்ந்து கொள்வார்கள். உங்களது வேடிக்கையான பேச்சின் காரணமாக, அவர்களை சந்தோஷப்படுத்துவார்கள். சமூகத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி, வெற்றி பெறுவார்கள். பொதுவாக இன்றைய தினம் அனைவருக்கும் சிறந்த நாளாக இருக்கும்.

சிம்மம்: உங்கள் வர்த்தகப் பணிகளை குறித்த நேரத்திற்கு முன்னதாக முடிப்பதில் சில பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆனால் நீங்கள் களைப்பாக உணர்வீர்கள். களைப்பை போக்கும் வழிகளைக் கண்டறியவும்.

கன்னி: உடல் நலன் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் கூடாது. முன்னர் ஏற்பட்ட காயங்கள், தற்போது உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும். இருப்பினும், இன்று அமைதியும், வளமும் ஏற்படும். இன்று வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிக்க நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதன் மூலம் புத்துணர்வு பெறுவீர்கள்.

துலாம்: அரசு தொடர்பான வேலை எப்போதும் பொறுப்பு நிறைந்தது. இருப்பினும், இன்று அரசாங்க சேவைகளில் உள்ள அனைவருக்கும் அற்புதமான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகள் சாதனைகளாக இருக்கும் மற்றும் உங்கள் செயல்திறன் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, வெகுமதி பெறுவீர்கள். உங்கள் காதுகளையும், கண்களையும் திறந்து வைத்துக் கொண்டு பேசாமல் செயல்படுவது நல்லது. உங்கள் மேலதிகாரிகள் ரகசியமான விஷயங்கள் குறித்து உங்களிடம் பேச விரும்பலாம்.

விருச்சிகம்: இன்று வர்த்தகத்திற்கான சிறந்த நாளாக இருக்கும். உங்கள் போட்டியாளர்களை ஒரு புதிய தயாரிப்பு அறிமுகத்தின் மூலம் அதிர்ச்சி அடையைச் செய்யலாம். இருப்பினும், நட்சத்திரங்கள் சாதகமான நிலையில் இல்லாததால், சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். நிகழ்ச்சியை சிறிது தாமதப்படுத்தி, பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் பின்னர் மேற்கொள்ளவும்.

தனுசு: பொதுவாக நீங்கள் சுறுசுறுப்பான மனிதர்தான். ஆனால் இன்றைய தினத்தைப் பொறுத்தவரை நீங்கள் சோர்வாகவும், சோம்பலாகவும் உணர்வீர்கள். சமீபத்தில் வேலைப்பளு அதிகம் இருந்ததன் காரணமாக, இந்த சோர்வு ஏற்பட்டிருக்கக் கூடும். வேலையையும், பொறுப்பையும் பிறருக்கு பங்கிட்டு வழங்க முயற்சி செய்யவும். எனினும் அவர்கள், நீங்கள் செய்வதைப்போல் சிறப்பாக செய்ய மாட்டார்கள்.

மகரம்: சில உறவுகள் குறித்து வெளிவரும் விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். அதனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, புதிரை நீக்க முயற்சி செய்வீர்கள். உங்களது பேச்சாற்றல் காரணமாக, கருத்து வேறுபாடுகளையும், சச்சரவுகளையும் தீர்க்க உதவுவீர்கள். போட்டியாளர்களால் பாதிப்பு ஏற்படாது என்றாலும், நீங்கள் எச்சரிக்கையுடன் தீவிரமாக செயல்பட வேண்டும்.

கும்பம்: உங்கள் தொடர்புத் திறன் இன்று அதிசயங்களை உண்டாக்கும். உங்களுடைய பேச்சாற்றல் மூலம் மக்களை கவர்வீர்கள். கூட்டங்களில் பங்கேற்கும்போது, இந்த திறன் மிகவும் பயன்மிக்கதாக இருக்கலாம். உண்மையில், உங்கள் அனைத்து வாதங்களும் மிகவும் இணக்கமானதாக இருக்கும். மக்கள் உங்களுடன் ஒத்துப் போகாமல் இருக்கும்போது, ​​அவர்களை நிர்பந்திக்காமல் இருப்பதுதான் உங்கள் உத்தியாகும்.

மீனம்: உன் அயலானை நேசியுங்கள் என்பதை நீங்கள் கடைபிடிப்பீர்கள். ஆன்மீக புத்தகங்களை படித்ததன் மூலம், நீங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள். ஆன்மீக விஷயங்களில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.