சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு இன்று (அக்.1) கரூர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்'