இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியுள்ளது. இதில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது.
பேரவை தொடங்கியதும் வினா விடை நேரம் நடைபெற்றுவருகிறது. இதில் உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.பி. அன்பழகன், காமராஜ், சி. விஜய பாஸ்கர், துரைக்கண்ணு, வெள்ளமண்டி நடராஜன், கே.சி. வீரமணி, எம் ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பதிலளித்துப் பேசுகின்றனர்.
இதைத் தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கியப் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புவர். மேலும் அரசினர் சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்படும். 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரியின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் தொடர்பான சட்டமுன்வடிவை அறிமுகம் செய்ய மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அனுமதி கோருவார். பின் அதனை அறிமுகம் செய்வார்.
அதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதிலளித்துப் பேசுகிறார்.
இதையும் படிங்க...இன்றைய சட்டப்பேரவை நிகழ்வு: உடனுக்குடன் உங்கள் ஈடிவி பாரத்தில்!