சென்னை: இந்திய மக்களின் சேமிப்பு என்றாலே மக்கள் மனதில் முதலில் தோன்று எண்ணம் தங்கம். தங்கம் எப்போதும், அதற்கு தனி மதிப்பு உண்டு. முக்கியமாக நடுத்தர, பாமர மக்களுக்கு அத்தியாவசிய, எதிர்காலத் தேவைக்கு கைகொடுக்கும் ஒரு முக்கிய உதவு கோலாக தங்கம் விளங்கி வருகிறது.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. ஆகையால் தான் தங்கத்தின் விலையில் தினம் தினம் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று தற்போது, மீண்டும் சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது.
தொடர்ச்சியாக இந்த வாரம் தொடகக்த்தில் இருந்தே 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ560 உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலையானது, கடந்த இரண்டு நாட்கள் குறைந்தது. இன்று காலை, கமாடிட்டி மார்க்கெட் தொடங்கிய நிலையில், தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.
தங்கம் விலை: இந்நிலையில் தற்போது, மிண்டும் 22-கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. அதாவது, இன்றைய நிலையில், 22- கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.ரூ.44,168-க்கும் கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.5,521-க்கும் விற்பனை செய்யப்படுகிறன. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.30-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.300 உயர்ந்து, 79,300-க்கும் விற்பனையானது நடைபெற்று வருகிறது. 24-கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.5991-க்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இன்றைய நிலவரம்-(செப் 23)
- 1கிராம் தங்கம்(22கேரட்) - ரூ.5,521
- 1சவரன் தங்கம்(22கேரட்) - ரூ.44,168
- 1கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ 5,991
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ 47,928
- 1கிராம் வெள்ளி - ரூ.79.30
- 1-கிலோ வெள்ளி - ரூ.79,300
இதையும் படிங்க: "சுரணையற்ற தலைமுறையை அரசியல் உருவாக்கிவிட்டது.. எனக்கு தந்தி அனுப்பியவர் கலைஞர்" - கமல்ஹாசன்!