சென்னையில், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் ஒரு வாரத்திற்கு முன்னர் தினமும் இறக்கும் முகமாக இருந்து வந்த தங்கம், தற்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கத் துவங்கிவிட்டது எனலாம். இதன் நிலையில் இன்று (செப்.19) தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, சவரனுக்கு ரூ.44,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை என்னதான் அதிகரித்தாலும், அதற்கான தேவை மட்டும் மக்களிடம் என்றுமே குறையாது எனலாம். அதாவது விலை எவ்வளவு இருந்தாலும் சரி, எப்பவும் கூட்டமாகவே இருக்கும் கடைகளில் ஒன்று ஜவுளிக்கடை ஒன்னொன்று நகைக் கடை எனலாம். ஏனெனில் அனைத்து வித விஷேசங்களுக்கும் நகை அத்தியாவசியமாக மாறிவிட்டது.
அப்படிப்பட்ட தங்கம், சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில் சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை பொருத்து விலை நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலையானது, தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மேலும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது, ஏற்றத்துடன் இருந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்தது.
தற்போது கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 வரை உயர்ந்துள்ளது. இன்று சர்வேதச சந்தை தொடங்கிய நிலையில், அதிரடியாக சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. இன்றுடன் சேர்த்து 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்று (செப்.19) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 550க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 400க்கும் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48 ஆயிரத்து 160க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.30க்கும், ஒரு கிலோ வெள்ளியின் ரூ.300 அதிகரித்து ரூ.78 ஆயிரதது 300 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய விலை நிலவரம்: (செப்டம்பர் 19)
- 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.5,550
- 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.44,400
- 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.6,020
- 1 சவரன் தங்கம் (28 கேரட்) - ரூ.48,160
- 1 கிராம் வெள்ளி - ரூ.78.30
- 1 கிலோ வெள்ளி - ரூ.78,300
இதையும் படிங்க: பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியா விடை? அடுத்த 5 நாட்கள் நடக்கப் போவது என்ன?