சென்னை: இஸ்ரேல் போர் காரணாமாக சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை தினமும் மாறுபட்டு வருவதால், இன்று உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சற்று ஏற்றம் கண்டுள்ளது. இதனால், இன்று (அக்.27) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.45,640க்கு விற்பனை ஆகி வருகிறது.
தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதரச் சூழல் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து, தினமும் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரோலியாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று (அக்.27) தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது, கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,705க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,640க்கும் விற்பனை ஆகி வருகின்றன. அதேபோல், வெள்ளி ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77.50க்கும், கிலோவிற்கு ரூ.500 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (அக்-27) நிலவரப்படி தங்கத்தின் விலை:
- 1 கிராம் தங்கம்(22கேரட்) - ரூ.5,704
- 1 சவரன் தங்கம்(22கேரட்) - ரூ.45,640
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,175
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.49,400
- 1 கிராம் வெள்ளி - ரூ.77.50
- 1 கிலோ வெள்ளி - ரூ.77,500
இதையும் படிங்க: இந்தியாவில் சாம்சங் 'கேலக்ஸி டேப் A9' டேப்லெட் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்ன?