கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 5ஆயிரத்து 684 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5ஆயிரத்து 642 பேர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு திரும்பிய 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று (ஆகஸ்ட் 6) ஆயிரத்து 91 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 144ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மட்டும் 110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று இன்று மட்டும் 6 ஆயிரத்து 272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்து வீடு சென்றவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 486 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று மட்டும் ஆயிரத்து 162 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் அரசு ஆய்வகங்கள் 61, தனியார் ஆய்வகங்கள் 65 என மொத்தம் 126 ஆய்வகங்கள் உள்ளன. மேலும், இன்று மட்டும் 67ஆயிரத்து 153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 30லட்சத்து 20ஆயிரத்து 174 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு
- சென்னை - 1,06,096
- செங்கல்பட்டு - 16,897
- திருவள்ளூர் - 15,890
- மதுரை - 11689
- காஞ்சிபுரம் - 10993
- விருதுநகர் - 9441
- தூத்துக்குடி - 8450
- திருவண்ணாமலை - 7058
- வேலூர் - 6897
- தேனி - 6836
- ராணிப்பேட்டை - 6342
- திருநெல்வேலி - 6071
- கோயம்புத்தூர் - 5997
- கன்னியாகுமரி - 5829
- திருச்சிராப்பள்ளி - 4834
- விழுப்புரம் - 4316
- கள்ளக்குறிச்சி - 4131
- சேலம் - 4251
- கடலூர் - 4232
- ராமநாதபுரம் - 3503
- தஞ்சாவூர் - 3484
- திண்டுக்கல் - 3331
- சிவகங்கை - 2768
- புதுக்கோட்டை - 2755
- தென்காசி - 2629
- திருவாரூர் - 1874
- திருப்பத்தூர் - 1436
- கிருஷ்ணகிரி - 1263
- அரியலூர் - 1154
- திருப்பூர் - 1059
- நாகப்பட்டினம் - 921
- நீலகிரி - 919
இதையும் படிங்க: மாநிலங்களுக்கான கரோனா நிதி: 2ஆவது தவணையாக ரூ.890.32 கோடியை விடுவிக்க அனுமதி!