தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மேலும் புதியதாக 54 ஆயிரத்து 964 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 564 நபர்களுக்கும், அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கு என மொத்தம் 569 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 76 லட்சத்து 38 ஆயிரத்து 302 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 246 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் நான்காயிரத்து 73 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்து மேலும் 510 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 39 ஆயிரத்து 648 என உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் அரசு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும், தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும் என மேலும் 4 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 525 என உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
சென்னை - 2,37,444
கோயம்புத்தூர் - 56,182
செங்கல்பட்டு - 53,270
திருவள்ளூர் - 44,437
சேலம் - 32,835
காஞ்சிபுரம் - 29,631
கடலூர் - 25,243
மதுரை - 21,307
வேலூர் - 21,069
திருவண்ணாமலை - 19,525
திருப்பூர் - 18,509
தஞ்சாவூர் - 18,253
தேனி - 17,185
கன்னியாகுமரி - 17,159
விருதுநகர் - 16,693
தூத்துக்குடி - 16,375
ராணிப்பேட்டை - 16,260
திருநெல்வேலி - 15,788
விழுப்புரம் - 15,291
திருச்சி - 15,061
ஈரோடு - 14,890
புதுக்கோட்டை - 11,687
நாமக்கல் - 11,855
திண்டுக்கல் - 11,546
திருவாரூர் - 11,419
கள்ளக்குறிச்சி - 10,911
தென்காசி - 8,579
நாகப்பட்டினம் - 8,655
நீலகிரி - 8,398
கிருஷ்ணகிரி - 8,195
திருப்பத்தூர் - 7,648
சிவகங்கை - 6,809
ராமநாதபுரம் - 6,489
தருமபுரி - 6,665
கரூர் - 5,519
அரியலூர் - 4,749
பெரம்பலூர் - 2,287
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 956
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,044
ரயில் மூலம் வந்தவர்கள் - 428