தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நேற்று முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அத்துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, பயணிகள் அதிகம் பயணம் செய்கின்ற பேருந்துகளை நாள்தோறும் முறையாகப் பராமரித்து, சுத்தம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஏறத்தாழ, 3 ஆயிரத்து 400 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, நேற்றிரவு முதல் அனைத்துப் பேருந்துகளும் கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: 70க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதி