சென்னை: வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பகுத்தறிவாளர்கள் கழகம் சார்பில் இன்று(அக்.25) உலகம் முழுவதும் நடைபெற்ற சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் உணவு உட்கொள்ளக் கூடாது என்று வீடுகளுக்குள்ளும் முடக்கி வைத்திருப்பதற்கு எதிராகக் கர்ப்பிணிப் பெண்களை அழைத்து வந்து அவர்களுக்குச் சூரிய கிரகணத்தின் போது சாப்பிட உணவுகள் கொடுத்து அவர்களைச் சாப்பிட வைத்தனர். அப்போது சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள், சாப்பிடுவதால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்தனர்.
மேலும் பேசிய திராவிட கழகத் தலைவர் வீரமணி, கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்வது பொய்யான பரப்புரையாகும். இது ஒரு பெண்களுக்கு எதிரான மூட நம்பிக்கை ஆகும் என்று கூறிய அவர் மூட நம்பிக்கையால் மக்களின் தன்னம்பிக்கை கெடுகிறது.
மன ரீதியாக கர்பிணி பெண்கள் உணவு உட்கொள்ள கூடாது எனக் கூறி அவர்களைத் துன்புறுத்தும் செயல் மூட நம்பிக்கையில் இருப்பதாகவும், ராக்கெட் ஏவுவதற்கு முன்பு இந்து கடவுளை வனங்கிவிட்டு வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானம் படித்த அளவிற்கு விஞ்ஞானம் அறிவை படிப்பது இல்லையென்ற அவர் கடவுளை நம்பி ராக்கெட் விட்டால் ஏன் தோல்வி அடைகிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து காற்று மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிக்கும் நேரத்தைக் குறைத்தது ஆனால் பாஜக தலைவர் போன்ற முட்டாள்கள் பட்டாசு வெடிக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும் இதுபோன்ற மூட நம்பிக்கையைக் கலைவதற்கு பள்ளி பாடத்திட்டத்தில் பகுத்தறிவைக் கொண்டு வர வேண்டுமெனக் கூறினார்.
இதையும் படிங்க:வெறும் கண்ணால் சூரிய கிரகணம் பார்த்தால் பார்வை பறிபோகும் - அறிவியல் தொழில் நுட்ப மையம் எச்சரிக்கை