சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) வெளியிட்ட 2023 ஆண்டு அட்டவணையில் குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. முக்கிய தேர்வுகளான குரூப்-2, குரூப்-1 தேர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பல்வேறுத் தரப்பிலும் இந்தப் பணியிடங்களை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தற்போது குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, "முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட்டு, 2024 மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பிரதான தேர்வுகள் ஜூலை மாதமும், அதன் முடிவுகள் நவம்பர் மாதமும் வெளியிடப்படும். டிசம்பர் மாதம் நேர்காணல், கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் அதற்கான காலிப் பணியிடங்கள் விபரம் பின்னர் வெளியிடப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் நிலுவையில் உள்ள அரசு பணிகள் நிலை? 40 லட்சம் பேரின் வாழ்க்கை கேள்விக்குறி