ETV Bharat / state

TNPSC Exams: ஆராய்ச்சி உதவியாளர் எழுத்துத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு - TNPSC News Update

TNPSC Exams: தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் (மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC  Hall Ticket for Research Assistant written Exam is Released

author img

By

Published : Jan 12, 2022, 9:44 PM IST

சென்னை: TNPSC Exams: இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் ( மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை ) 22ஆம் தேதி (காலை மற்றும் மாலையில்) நடைபெற உள்ளது .

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in; www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவுரைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும். தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் விடைகளைக் குறிக்கவும் கறுப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்; தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.

இவ்வளவு நேரம் தேர்வறைக்குள் இருக்க வேண்டும்

எந்த ஒரு தேர்வரும் காலையில் நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எந்த ஒரு தேர்வரும் மாலையில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்துகொள்ளும் பொருட்டுத்தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், விரைவுத்தகவல் குறியீடு (QR CODE) அச்சிடப்பட்டுள்ளது.

இதனை விரைவுத்தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை Google Maps மூலமாகத் தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.

தேர்வு அறைக்குள் அலைபேசி மற்றும் வேறு ஏதேனும் மின்னணு உபகரணங்கள் கொண்டுசெல்ல அனுமதியில்லை. எனவே, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி எண் 17 ( A ) ( iv )-ல் உள்ள குறிப்பின்படி தங்களது அலைபேசி உட்பட பிற உடைமைகளை தேர்வுமையத்திலுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் .

இருப்பினும் சொந்த உடைமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வரின் சொந்த பொறுப்பிற்குட்பட்டதாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 17,934 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.