ETV Bharat / state

குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு - EXAM

சென்னை: குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி, தேர்வு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குருப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு
author img

By

Published : Jul 11, 2019, 1:28 PM IST

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில்,

'குருப் 4 (தொகுதி 4இல் அடங்கிய பல்வேறு பதவிகள், கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கான 6,491 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 14 ஆகும். இந்தப் பணியிடங்களுக்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக ஜூலை 16 வரை தேர்வுக்கட்டணம் செலுத்தலாம்.

கடைசி நாளில் விண்ணப்பிக்கவரும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அதனை எதிர்கொள்ளும் அளவில் தேவையான எண்ணிக்கையிலான சர்வர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவையான அளவு இணையதள அலைவரிசை கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், ஜூலை 14ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாளுக்கும் தேர்வு நடைபெறும் செப்டம்பர் 1ஆம் தேதிக்கும் இடையே மிகக் குறைந்த நாட்களே இருப்பதால், விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதியை எந்தக் காரணம் கொண்டும் நீட்டிக்க இயலாது. எனவே கடைசிநாள் வரை காத்திருக்காமல், உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு, கடவுச்சொல் ஆகியன மறந்துவிட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்க தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpscexams.in) இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த இணையதளத்தில் பதிவுக்கட்டணம், தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அவர்களின் பணப்பரிமாற்ற விவரத்தினை விண்ணப்பம் செலுத்தும் பக்கத்தில் பணப்பரிமாற்றம் நிறைவடைந்துவிட்டதா அல்லது தோல்வியடைந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். பணப்பரிமாற்றம் தோல்வியடைந்துவிட்டால் அவர்கள் பணம் செலுத்துவதற்கான கடைசி நாளுக்குள் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

குரூப் 4-க்கு விண்ணப்பத்தினை பதிவு செய்து இறுதியாக சமர்ப்பித்து அதற்கான விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அது முழுமைபெற்ற விண்ணப்பமாக கருதப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப விவரங்களை விண்ணப்பம் இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர் வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டுவிட்ட பின்னர், அதில் உள்ள விவரங்களை மாற்ற முடியாது. இது தொடர்பாக பெறப்படும் மின்னஞ்சல், மனுக்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

பயனாளர் குறியீடு, கடவுச்சொல், புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம், நிரந்தரப்பதிவு தொடர்பான பிரச்னைகள், நடப்புத் தேர்வு விண்ணப்பம் குறித்த தகவல்கள், பதிவுக்கட்டணம் அல்லது தேர்வுக்கட்டணம் செலுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044 25300336, 25300337, 25300338, 25300339 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளவும் அல்லது helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கைகளை உரிய விவரங்களுடன் அனுப்பவும்.

இதர பொதுவான கேள்விகள், தகவல்களுக்கு 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்' என கூறப்பட்டுள்ளது.

Intro:
குருப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 17 ந் தேதி இறுதி நாள் Body:

சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குருப் 4 (தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ) 6491 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கையினை 14. 6.2019 அன்று வெளியிட்டது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14. 7.2019 ஆகும். இந்தப் பணியிடங்களுக்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர். 14.7.2019 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது. 16.7.2019 வரை தேர்வுக்கட்டணம் செலுத்தலாம்.

கடைசி நாளில் விண்ணப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களை எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அதனை எதிர்கொள்ளும் அளவில் தேவையான எண்ணிக்கையிலான சர்வர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவையான அளவு இன்டெர்னெட் அலைவரிசை கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 14. 7.2019 இரவு 11.59 மணி வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாளுக்கும் தேர்வு நடைபெறும் 1.9.2019 இடையே மிகக் குறைந்த நாட்களே இருப்பதால், விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதியை எந்தக் காரணம் கொண்டும் நீட்டிக்க இயலாது. எனவே கடைசி நாள் வரை காத்திருக்காமல், உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியன மறந்துவிட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்க தேர்வாணைய இணைய தளத்தில் www.tnpscexams.in இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பதிவுக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அவர்களின் பணப்பரிமாற்ற விவரத்தினை விண்ணப்பம் செலுத்தும் பக்கத்தில் பணப்பரிமாற்றம் நிறைவடைந்துவிட்டதா அல்லது தோல்வியடைந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். பணப்பரிமாற்றம் தோல்வியடைந்துவிட்டால் அவர்கள் பணம் செலுத்துவதற்கான கடைசி நாளுக்குள் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

குருப் 4 க்கு விண்ணப்பத்தினை பதிவு செய்து இறுதியாக சமர்ப்பித்து அதற்கான விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அது முழுமை பெற்ற விண்ணப்பமாக கருதப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்களை அவர்களின் தன்பதிவுப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப விவரங்களை விண்ணப்பம் இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர் வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டுவிட்டபின்னர், அதில் உள்ள விவரங்களை மாற்ற முடியாது. இது தொடர்பாக பெறப்படும் மின்னஞ்சல் மற்றும் மனுக்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

பயனாளர் குறியீடு, கடவுச்சொல், புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம், நிரந்தரப்பதிவு தொடர்பான பிரச்சனைகள், நடப்பு தேர்வு விண்ணப்பம் குறித்த தகவல்கள், பதிவுக்கட்டணம் அல்லது தேர்வுக்கட்டணம் செலுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044 25300336, 25300337, 25300338, 25300339 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளவும் அல்லது helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிகைகளை உரிய விவரங்களுடன் அனுப்பவும்.

இதர பொதுவான கேள்விகள் மற்றும் தகவல்களுக்கு 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.