ETV Bharat / state

குரூப் 2A தேர்வு முறைகேடு: இருவரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: குரூப் 2A தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி மேலும் இருவரிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

cbcid-inquiry
cbcid-inquiry
author img

By

Published : Feb 8, 2020, 6:08 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2A தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 42 பேர் முறைகேடு செய்திருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடியினருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிபிசிஐடியினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தேர்வில் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டு குரூப் 2A தொடர்பாக 17 பேரும், குரூப் 4 தொடர்பாக 16 பேரும், வி.ஏ.ஓ தேர்வில் ஒருவரும் என மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த 6ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதைத்தொடர்நது சிபிசிஐடியினர் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ஓம் காந்தன் என்பவரையும் சிபிசிஐடியினர் 5 நாட்கள் காவலில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம் காந்தனை சிபிசிஐடியினர் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களுக்கு அழைத்து சென்று தேர்வு தாளில் முறைகேடு செய்தது குறித்து செயல்முறை விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று குரூப் 2A முறைகேடு தொடர்பாக சிபிசிஐடியினர் கரூர் மற்றும் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை அழைத்துச் சென்று எழும்பூர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூடி மறைக்கும் எடப்பாடி அரசு - வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!

Intro:Body:குரூப்2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இருவரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017 ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்து இருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுவரை குரூப்-2 ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 17 நபர்களும் குரூப்-4 தேர்வில் 16 நபர்களும்,வி.ஏ.ஓ தேர்வில் 1 நபரும் என மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் குரூப்2ஏ மற்றும் குரூப்4 தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்டு முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயகுமார் கடந்த 6 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் நேற்று சிபிசிஐடி போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஓம் காந்தனை சிபிசிஐடி போலீசார் 5நாட்கள் போலீஸ் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ஜெயகுமார் மற்றும் ஓம் காந்தனை சிபிசிஐடி போலீசார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு இவர்கள் தேர்வு தாளில் முறைகேடு செய்தது எப்படி உள்ளிட்டவற்றை செயல்முறையாக செய்து காட்ட சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குரூப்2ஏ முறைகேடு தொடர்பாக இன்று கரூர் மற்றும் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த இரண்டு பேரை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.