சென்னை: குரூப் - 2, 2ஏ பிரிவுகளில், 5,529 காலியிடங்களை நிரப்ப, அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில், முதல் நிலைத் தேர்வு இன்று (மே 21) நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30க்கு தேர்வு நிறைவுப்பெறும்.
- கையெழுத்திடுவது போன்ற நடைமுறைக்காக, கூடுதலாக 15 நிமிடங்கள் தேர்வறையில் இருக்க வேண்டும்.
- காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும்.
- அதிகபட்சமாக காலை 8.59 மணி வரையில் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.
- தேர்விற்கு வருபவர்கள் ஹால் டிக்கெட்டுடன் ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை என ஏதாவது ஒன்றின் பிரதி மற்றும் அசல் எடுத்து வர வேண்டும்.
- இந்த தேர்வுக்கு கறுப்பு நிற, ‘பால் பாய்ண்ட்’ பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவோரில், ஒரு பதவிக்கு 10 பேர் வீதம் 5 ஆயிரத்து 529 பதவிகளுக்கு, 55 ஆயிரத்து 290 பேர் செப்டம்பரில் நடைபெறும் பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதல்நிலைத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது..
இதையும் படிங்க: ‘குரூப் - 2' தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு