ETV Bharat / state

நாளை குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு - 55,071 பேர் எழுதுகிறார்கள்! - குரூப்2

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு நாளை(பிப்.25) நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 55,071 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

TNPSC
TNPSC
author img

By

Published : Feb 24, 2023, 7:13 PM IST

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரிவில், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள், உதவி ஆய்வாளர்கள், சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் மற்றும் குரூப்-2ஏ பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக்கான நகராட்சிப் பணியாளர் ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 446 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2022ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி நடத்தியது. இந்த முதல்நிலைத் தேர்வை 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதினர். அதில் தேர்ச்சி பெற்ற 57 ஆயிரத்து 641 பேருக்கு நாளை(பிப்.25) முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த முதன்மைத்தேர்வை 27,306 ஆண்கள், 27,764 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 55 ஆயிரத்து 71 பேர் எழுத உள்ளனர். 20 மாவட்டங்களில் 186 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் 32 மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை, மாலை என இரண்டு வேளைகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தனியாகவும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தனியாகவும் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் துறை வாரியாக காலிப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க: மூக்கு வழியாக நுரையீரல் செல்லும் கரோனா.. சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் புதிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.