TNPSC Exams: சென்னை, தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வுகள் தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் அதன் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வரும் 8ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் திட்டமிடுதல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியாளர்கள் பணியிடத்திற்கான பணிக்கான தேர்வு 9ஆம் தேதியும்,
தமிழ்நாடு பொதுத்துறையில் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கு 22ஆம் தேதியும் எழுத்துத் தேர்வு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட இருந்த தேர்வுகள், மாற்று தேதிக்கு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவலை நாளை தெரிவிக்க உள்ளதாக, அதன் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Ban on Live Classes in TN: 1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்பிற்குத் தடை - தமிழ்நாடு அரசு