டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு, தமிழ்நாட்டில் பூதகரமாக உள்ள நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார், பாலசுந்தராஜ், வெங்கடரமணன், 3 காவலர்கள், 23 அரசு ஊழியர்கள், 5 தேர்வர்கள் மற்றும் 6 ஓட்டுநர்கள் என மொத்தம் 42 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டுப் புகாரில், மேலும் இரண்டு பெண் உட்பட 3 பேரினைக் கைது செய்துள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து இதுவரை மொத்தம் 45 பேரினை சிபிசிஐடியினர் கைது செய்தனர்.
இதற்கிடையே இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாருக்குச் சொந்தமான பல்வேறுப் பகுதிகளில், சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது அவர் பயன்படுத்தி வந்த வங்கிக் கணக்குகளில் இருந்த 7 லட்சம் ரூபாய் மற்றும் 2 கார்களை சிபிசிஐடி காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க :மாற்றுத் திறனாளிகள் நலப்பணிகள் - அமைச்சர் சரோஜா உறுதி!