ETV Bharat / state

மே 21இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுகள்: ஜூன் 5இல் முடிவுகள் - டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நேரம் மாற்றம்

குரூப் 2 நேர்முகத் தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 117 மையங்களில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மே 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2A தேர்வுகள்

author img

By

Published : Feb 18, 2022, 6:35 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின்கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்காகப் போட்டித் தேர்வு, நேர்காணல் நடத்தப்படுகிறது.

கரோனா தொற்று காரணமாகப் பல்வேறு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கான தேதி இன்று (பிப்ரவரி 18) அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தொடர்பாக இம்மாதம் அறிவிப்புகளை வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதியன்று குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு அறிவிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

வரும் 23ஆம் தேதிமுதல் மார்ச் 23ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 117 மையங்களில் நடைபெறும்.

தேர்வு முடிவுகள்

குரூப் 2 நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறும்.

மேலும், சில துறைகளில் காலிப் பணியிடங்களின் விவரங்களைக் கேட்டுவருகிறோம். அதனால் தேர்வு அறிவிப்பின்போது 1000 பணியிடங்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.

மே 21ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்வுகள்

கேள்விகள்

இந்தத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்.

தேர்வுகள் நேரம் மாற்றம்

இதுவரை காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வுகள், இனி காலை 9.30 மணிக்குத் தொடங்கும். அதன்படி காலை வேலையில் 9.30 முதல் 12.30 வரை, பிற்பகல் வேலையில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடத்தத் திட்டம். நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக்கான கலந்தாய்வு டிசம்பர் முதல் ஜனவரி வரை நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

குரூப் 2, குரூப் 2 ஏ பணியிடத்திற்கு ஏற்கனவே 5800 பதவிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சில துறைகள் பணியிடங்களைக் குறைத்துக்கொண்டதால் 5529 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறும். கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாகத் தேர்வு நடைபெறாததால் அரசு அறிவித்துள்ளபடி பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பணி விவரங்கள் சம்பளம்

17 சப் ரிஜிஸ்டர் பதவிகளும், தொழிலாளர் நலத் துறையில் 19 இடங்களும், 58 காலிப்பணியிடங்கள் காவல் துறையில் முதன்முறையாக Assitant Special Branch-இல் ( சிறப்புக் கிளை உதவியாளர்) டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக் கூறினார்.

அரசு பொதுத் துறை நிறுவனம், கழகங்கள், வாரியத்திற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும். பணி விவரங்களைச் சம்பளம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. மார்ச் 3ஆம் தேதி இது குறித்து இறுதிசெய்யப்பட்டு விவரங்கள் வெளியிடப்படும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

தமிழ் வழி வினாத்தாள்

ஆவின், மின்சார வாரியம், போக்குவரத்து போன்ற துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளோம். மேலும், இந்தப் பணியிடங்களையும் ஏற்கனவே உள்ள பணியிடங்களின்படி, தரவரிசைப்படுத்தி, அதன் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வினை நடத்துவோம்.

தமிழ் வழி வினாத்தாளில் ஏற்படும் பிழைகளைச் சரிசெய்வதற்கு வல்லுநர்கள் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது, பிழைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

9 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள்

இந்தத் தேர்வுக்கு ஒன்பது லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் ஒரு பணியிடத்திற்கு 10 பேர் வீதம் முதன்மைத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். மார்ச் 3ஆம் தேதி அதற்கான விரிவான அறிக்கை வெளியிடப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தவறுகள் இல்லாமல் பாதுகாப்பாகத் தேர்வு நடத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 % வழங்க சட்டம் இயற்ற வேண்டும் - ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.