சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், மின்சார வாரியத்தில் தொழில் பயிற்சி முடித்தோர் நலச்சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை ஐடிஐ, டிப்ளமோ, பிஇ படித்த மற்றும் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு மின்சார வாரியத்தில் வேலை வழங்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களைக் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டைப் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'ஈரோடு கிழக்கு காங்கிரஸிற்கே! கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவோம்' - கே.எஸ்.அழகிரி