பி.டெக் சேர்க்கைக்கான டி.என்.இ.ஏ கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்கள், tneaonline.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தகுதி மற்றும் இருக்கை ஒதுக்கீட்டு முறையை சரிபார்த்துக் கொள்ளலாம்.
டி.என்.இ.ஏ 2020 இரண்டாம் சுற்று ஒதுக்கீடு முடிவை மாணவர்கள் சரிபார்க்க https://www.tneaonline.org/ இந்த நேரடி இணைப்பையும் பயன்படுத்தலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போது 3 மற்றும் 4ஆவது சுற்றுகளுக்கான ஆலோசனை செயல்முறையினை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது.
தற்போது மூன்றாவது சுற்றுக்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதில், 35 ஆயிரத்து,168 முதல் 70 ஆயிரத்து 300 மாணவர்கள்வரை பங்கேற்க முடியும், நான்காவது சுற்றில் 70 ஆயிரத்து 301 முதல் ஒரு லட்சத்து10 ஆயிரத்து 873வரை தரவரிசை பெற்ற மாணவர்கள் பங்கேற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.