கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், 2020ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 14 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளங்கலை பட்ட படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது.